பொருளாதார மீட்சியில் கடந்த அரசின் பங்களிப்பும் உள்ளது! - ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து
நாட்டின் பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பும் உள்ளது. அதை எவரும் மறுதலிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார்.
யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
பொருளாதார மீட்சி
அவர் வழங்கிய நேர்காணலில், பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு தற்போதைய அரசு முன்னெடுத்த செயற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.

எனினும், முன்னைய அரசின் பங்களிப்புத் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போதே, இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கு கடந்த அரசு வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய வெற்றிகளுக்கான அடித்தளம் முன்னைய ஆட்சியிலேயே போடப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
70 வீதமாக இருந்த நாட்டின் பணவீக்கம் மிக விரைவாக 2 வீதமாகக் குறைக்கப்பட்டது மறை 7 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக மாற்றப்பட்டது.
இவையெல்லாம் குறைமதிப்புக்கு உட்படும் விடயமல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.