யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
கொழும்பு - அக்குரேகொடையில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி, தற்போது புலனாய்வு அதிகாரிகளிடம் பல்வேறு வாக்குமூலங்களை வழங்கி வருகின்றார்.
இந்நிலையில், தனக்கு வெளிநாட்டிலிருந்து துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவிட்ட நபர் வழங்கிய அறிவுறுத்தல் தொடர்பிலும் அவர் தகவல் வழங்கியுள்ளார்.
இதன்போது, காரில் இருக்கும் சட்டத்தரணி மாத்திரமல்ல, அந்த நேரத்தில் காருக்குள் வேறு யார் இருந்தாலும், சுட்டுக் கொல்லுமாறு துப்பாக்கிதாரிக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
கடந்த 13ஆம் திகதி, அக்குரேகொடையில் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால், சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவமானது, நாட்டில் சட்டத்தரணிகள் மத்தியில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது, காரில் இருக்கும் சட்டத்தரணி மாத்திரமல்ல, அந்த நேரத்தில் காருக்குள் வேறு யார் இருந்தாலும், சுட்டுக் கொல்லுமாறு தனக்கு உத்தரவு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri