1000 நாட்களை கடந்தும் தொடரும் காணி உரிமைப் போராட்டம் - மக்களுக்கான ஆதரவை வழங்கிய சுமந்திரன்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று(19.06.2026) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை
1000 நாட்களை கடந்த இந்த போராட்டம், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பாரம்பரியக் குடியிருப்புகளையும் வாழ்வாதாரக் காணிகளையும் தமக்கு உடனே திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தியே நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் இப்போராட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டுள்ளதுடன், இந்த வாரம் சுமந்திரன் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan