தமிழர் பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
மட்டக்களப்பு - பிரதான பேருந்து தரிப்பு நிலையம் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(19.06.2026) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணொருவரின் சடலம் மீட்பு
அத்துடன், சடலம் பற்றி அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வாவியை அண்டிய பகுதியில் உள்ள மரத்தின் கீழ் உயிரிழந்த நிலையில், 60 வயது மதிக்ககூடிய ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதையடுத்து பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
