மட்டக்களப்பில் இராட்சத முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மடக்கி பிடிப்பு
மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளுர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இராட்சத முதலை உட்புகுந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(19.6.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் அந்தப் பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மடக்கி பிடிப்பு
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதி பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன், பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் முதலையை மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த முதலையை வனத்தில் விடுவதற்காக வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றிச் சென்றனர்.
