ஆனையிறவு உப்பள ஊழியர்களின் தொடர் போராட்டம்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஆனையிறவு உப்பள ஊழியர்களின் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும்(27) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உப்பளத்தில் கடந்த (14.05.2025) ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, தம்மை ஒரு அடிமைகள் போல் நடாத்தப்பட்டு வருவதன் காரணமாகவும் தமக்கு உப்பளத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்கப்படுவதில்லை எனவும் உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வை வழங்குவார்கள் என எதிர்பார்த்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடி எமக்கான உரிய தீர்வினை பெற்று தந்து எம்மை வழமை போன்று பணியில் ஈடுபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
