யாழில் சட்டவிரோத மணல் கடத்தல்: சாரதி கைது
சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் ஏற்றி வந்த கடல் மண் நேற்று(07) அச்சுவேலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பளை பகுதியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதிப் பத்திரம் இன்றி மண் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடல் மண் கடத்தல்
அச்சுவேலி பொலிஸாக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வீரவாணி பகுதியில் குறித்த டிப்பர் வாகனம் மறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அனுமதி பத்திரம் இன்றி கடல் மண் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.
புத்தூர் கலைமதி பகுதியை சேர்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
கைப்பற்ற டிப்பர் வாகனம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மல்லாரும் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் பெருந்தொகை மஞ்சள் மீட்பு |
அனுமதி பத்திரமின்றி அரச மதுபானம் விற்பனை: இருவர் கைது |





மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
