நுகர்வு பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் : நளின் பெர்னாண்டோ
வற் வரி அதிகரிப்பால் நுகர்வு பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜா-எல மஹாபொல வர்த்தக கண்காட்சியில் வைத்து நேற்று (13.12.2023) ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்
“நாடு என்ற ரீதியில் நாம் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருப்பதோடு எங்களுடைய கடந்த கால பொருளாதார கொள்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், நாம், மற்ற அனைத்து விடயங்களை விடவும் நாட்டில் அரசாங்கத்தின் வருமானத்தை முக்கியமாக கருதுகின்றோம்.
இந்த திட்டத்தின் மூலம் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், நுகர்வு பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி வற் வரி அதிகரிப்பை மேற்கொள்ளும் செயன்முறை சாத்தியம் என நாம் நம்புகின்றோம்” என தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri