யாழ். காரைநகர் கடலில் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது(Video)
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒரு இந்திய இழுவைப் படகுடன் ஆறு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து ஊர்காவற்துறை
நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிவான் முன்னிலையில்
முற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 6 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (13.12.2023) இடம்பெற்றுள்ளது.
கடற்பரப்புக்குள் ஊடுருவல்
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்புக்குள் ஊடுருவி எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக தகவல்கள் - கஜிந்தன், பிரதீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
