விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து வெளியான அறிவிப்பு
வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் விளைவாகவே சமையல் எரிவாயு, சீனி, பால் மா போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இறக்குமதியாளர்கள் சட்ட ரீதியற்ற சந்தை விலையில் வெளிநாட்டு நாணயத்தை (அமெரிக்க டொலர்களை) கொள்வனவு செய்கிறார்கள்.
இதன் விளைவாக, அவர்களால், ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் பொருட்களை விற்க முடியவில்லை.
இந்த நிலையில் இறக்குமதியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு செயற்கைத் தட்டுப்பாடுகளை உருவாக்கி இறக்குமதியைத் தேக்கி வைப்பதைத் தவிர்ப்பதற்காகவே விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் நியாயமற்ற வகையில் லாபம் ஈட்டினால், கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது.
அந்நியச் செலாவணியின்றி அரசாங்கத்தால் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுமதி மற்றும் சுற்றுலா மூலம் நாட்டிற்கு அமெரிக்க டொலர் கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
