ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு தூதுவர் பதவிகள்
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளின் தூதுவர்களாக நியமிக்கும் முன்னைய அரசாங்கங்களின் செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியும் முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் ஓய்வு பெற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தென்னாப்பிரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதியை பாகிஸ்தானுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூதுவர் பதவிகள்
அதே நேரத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி நிமல் சேனாதீர, ஐக்கிய இராச்சியத்துக்கான தூதுவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான தூதுவராக பேராசிரியர் அருஷா குரேயும், ஜப்பானுக்கான தூதுவராக பேராசிரியர் நிர்மலா ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)