இலங்கையில் மீண்டும் நிறுவப்பட்ட பணமோசடி தடுப்பு உயர்மட்டக்குழு!
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான உயர்மட்ட பணிக்குழுவை இலங்கை மீண்டும் அமைத்துள்ளது.
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான ஆசிய பசிபிக் குழு மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்தல் கட்டமைப்பில் இலங்கையின் மூன்றாவது மதிப்பீடு, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது வரவிருக்கும் இந்த மதிப்பீட்டின் போது, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 40 பரிந்துரைகளுடன் தொழில்நுட்ப இணக்கத்தை இலங்கை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு
இந்தநிலையில், சட்ட மா அதிபர் திணைக்களம்
இலங்கை பொலிஸ்
இலங்கை சுங்கம்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணையகம்
நீதி அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
வெளியுறவு அமைச்சகம்
நிதி அமைச்சகம்
நிறுவனப் பதிவாளர் திணைக்களம்,
உள்நாட்டு இறைவரித்திணைக்களம்
கலால் திணைக்களம்
சட்ட வரைவாளர் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகம்,
இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையகம்
கட்டுமானத் தொழில் மேம்பாட்டு ஆணையகம்
தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையகம்
அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் துறை போன்ற நிறுவனங்களின் செயல் திட்டங்களை கண்காணித்து பின்தொடர்வதற்காக அமைச்சர்கள் அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2023 ஆம் ஆண்டு, பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான உயர்மட்ட பணிக்குழு, முதலில் நிறுவப்பட்டது.
பணிக்குழுவின் உறுப்பினர்கள்
இந்த உயர்மட்ட பணிக்குழுவின் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் புவனேக அலுவிஹாரே, நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதித்திட்டமிடல் பிரதியமைச்சர் கௌரவ ஹர்சன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் நெலுமணி தௌலகல உட்பட்டவரகள் செயற்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |