சட்ட மா அதிபரின் செயற்பாடுகள்: தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசேட நடவடிக்கை
சட்ட மா அதிபரின் செயற்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உத்தேசித்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டத்திருத்தம்
கடந்த தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி பொதுமக்களிடம் முன்வைத்திருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவ்வாறான வாக்குறுதி ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வழக்கையேனும் சட்ட மா அதிபர் மீளப்பெற தீர்மானிப்பதாயின், அது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தாக வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கிய சட்டத்திருத்தம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
