புதுக்குடியிருப்பு- பாண்டியன் வீதி பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த பாலம் அமைக்கும் பணியை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (16.06.2026) நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பாண்டியன் வீதிப் பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினரை வலியுறுத்திவந்தார்.
செல்வம் அடைக்கலநாதன் பொறுப்பில் இருக்கும் வரை ரெலோவை புறக்கணியுங்கள்! போர் கொடி தூக்கிய மூத்த உறுப்பினர்
பாலத்தை அமைக்கும் பணிகள்
அத்தோடு வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளருடன் தொலைபேசியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்குத் தனது நன்றிகளை தெரிவித்ததுடன், விரைவாக பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு தெரிவித்தார்.

அதேவேளை விபத்துக்கள் ஏற்படாதவாறு பாலம் அமைக்கும் இடத்தைச்சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
இந்தநிலையில், விரைவில் குறித்த பாலத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், விபத்துக்கள் ஏற்படாதவாறு குறித்த பாலம் அமைக்கும் இடத்தைச்சுற்றி பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்வதாகவும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் சலேவின் மடிக்கணினிக்குள் மறைக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்






உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri