செல்வம் அடைக்கலநாதன் பொறுப்பில் இருக்கும் வரை ரெலோவை புறக்கணியுங்கள்! போர் கொடி தூக்கிய மூத்த உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.
இனவிடுதலைக்காக போராடிய அமைப்பு
இதன்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இனவிடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது.

குறிப்பாக பாலியல் வியாபாரியான இன்றைய ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகின்றது. கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் கொலையிலும் செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது. பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் தலைமை பதவியை தக்கவைக்கவென தலைமை குழுவிடம் கெஞ்சிப் பெற்ற கல அவகாசத்தை பயன்படுத்தி இன்று தனது பதவியை நிரந்தரமானதாக உறுதி செய்திருக்கிறார் செல்வம் அடைக்கல நாதன்.
சிரேஸ்ர உறுப்பினர் ரமேஷின் கொலைக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. பாலியல் விவகாரத்துக்கும் தீர்வு வழங்கப்படவில்லை.
உடைந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் -ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும்! சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவிப்பு
தமிழரின் அபிலாசைகள்
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரதினிதியாக தமிழீழ விடுதலை இயக்கம் மீழப் புனரமைக்கப்பட வேண்டும். இதை சுட்டிக் காட்ட முயற்சித்தால் அல்லது, தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை வருகின்றார்கள்.

இதேநேரம் ஈழ விடுதலைக்காக போராடியவர்கள் ஒவ்வொருவரும் ஒருதாய் பிள்ளைகள் தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.
ஆனால் அந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட ஆயுதங்கள் எம்மை நோக்கி எந்து எம்மவர்களால் திசை திரும்பியதோ அன்றே தமிழரின் அபிலாசைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.
குறிப்பாக எம் எல்லோருக்க எதிரான பொது எதிரி எங்கோ இருக்கும் நிலையில் நாம் எமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இதுதன் இன்றைய நிலைக்கும் காரணம். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்றார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri