அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்! தலைமை தாங்க ரணில் தயார்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டமொன்றை ஏற்பாடு செய்து தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
பாரிய மக்கள் போராட்டம்
கொழும்பின் முக்கிய கேந்திர இடமொன்றில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி அல்லது பொதுக் கூட்டம் வடிவத்தில் அரசாங்கத்துக்கு எதிரான முதலாவது பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவர்கள் உத்தேசித்துள்ளனர்.

ராஜபக்ச தரப்பு சட்டச்சிக்கல்களில் சிக்கி, பலமான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் வரை ரணில் தன் அரசியல் மீள்வருகையை ஒத்தி வைத்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் ராஜபக்ச தரப்பு சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கும் சூழலில் தனது அரசியல் மீள்வருகைக்குப் பொருத்தமான காலகட்டமாக தற்போதைய சூழலை ரணில் விக்கிரமசிங்க கருத முற்பட்டுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் ரணிலில் மீள் அரசியல் பிரவேசம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளின் தொடக்கம் என்பன நிகழக் கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்
YOU MAY LIKE THIS VIDEO
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 16 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.