கடந்த15 நாட்களில் நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
நாட்டிற்க ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களுக்குள் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மட்டும் 21,839 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையாளர்கள் எண்ணிக்கையில் 42% ஆகும்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து 3,503 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,160 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மொத்த வருகை
மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூன் 14 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 1,076,487 எனப் பதிவாகியுள்ளது.

இவர்களில், இந்தியாவிலிருந்து 272,099 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 76,686 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 102,253 பேரும் வந்துள்ளனர் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri