இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர - கலகெதர இடையிலான நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மிக முக்கியமான பகுதியான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போதைக்கு 85% வரை நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக முடிவடைந்துள்ள சில பணிகள்
மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியே செல்லும் இந்த வீதிப் பகுதியில் நீண்ட பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.

இந்தப் பகுதி திறக்கப்படுவதன் மூலம் கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணிப்பதற்கான நேரம் ஒன்றரை மணி நேரமாகக் (1.5 மணி நேரம்) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri