குருந்தூர்மலைக்கும் மகாவம்சத்துக்கும் தொடர்பு... புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொடர்பில் கண்டனம்!
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்த வரலாற்றுடனும், பௌத்த வரலாற்று நூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர் மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பில் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப் பகுதிக்கு நேற்று (15.10.2025) நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது, ரவிகரன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
“குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது. அதற்கமையவே இப்பகுதிக்கு வருகைதந்தேன். ஏற்கனவே, தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில், காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
போலியானதொரு வரலாறு
இந்நிலையில், 14.10.2025 அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூரமலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டுவந்துள்ளனர்.
இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

இத்தகைய சூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam
க்ரிஷ் அம்மா இறந்துவிட்டார்... ரோகிணி போட்ட திட்டம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam