தங்காலையில் நாய்களுக்கும் ஐஸ்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள்!
தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய மூன்று நாய்கள் ஒரே இடத்தில் சுற்றும் காட்சியை கண்டு பரிசோதனை செய்ததில் குறித்த நாய்கள் ஐஸ் போதை கலந்த நீரை பருகியதால் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் வழமையாக சுற்றித்திரியும் நாய்கள் நேற்று அப்பகுதிகளில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@lankasrinews இலங்கையில் போதைப்பொருள் கலந்த தண்ணீரை குடித்த நாய் வைரலாகும் காணொளி! #SriLanka #Dog #ViralVideo #Drugs #AnimalNews #BreakingNews #Trending #SocialMedia #CurrentAffairs #SriLankaNews #Viral #PublicConcern #Awareness #NewsUpdate #OnlineTrend #AnimalWelfare #ShockingVideo #PublicReaction #NewsAlert #TrendingNow
♬ original sound - Lankasri News
போதைப்பொருட்கள்
தெற்கு கடலில் மிதந்த நிலையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகளை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (14) கைப்பற்றி தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
