நாட்டு மக்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சுதந்திர தின வாழ்த்து செய்தி
நாட்டு மக்களுக்கு 78ஆவது தேசிய சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதையிட்டு தாம் பெருமகிழ்ச்சி அடைவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அமெரிக்கா- இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பொதுவான இலக்குகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மேம்பட்டு வரும் கூட்டாண்மைத் திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர மரியாதையுடனான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்ததாக சுட்டிக்காட்டிய ரூபியோ, இலங்கையைத் தாக்கிய கடுமையான டித்வா புயலின் பின்னர் அமெரிக்கா வழங்கிய உதவிகளை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.