பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்ற சிலரால் சஜித் கட்சிக்குள் குழப்பம்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்தப் பார்க்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"கட்சிக்குள் உள்ள சிலர் பிரதமர் பதவி குறித்து கனவு காண்கின்றனர். மேலும் சிலர் தேசியப் பட்டியலுக்காகப் போராடுகின்றனர்.

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துள்ள சிலரும் இருக்கின்றனர். இவ்வாறு கனவு காண்பவர்கள்தான் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனைச் சீர்செய்யாவிட்டால் கட்சியாக முன்னோக்கிப் பயணிக்க முடியாது.
அது கட்சிக்கே பெரும் பின்னடைவாக அமையும். மக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி நாட்டை மீட்க முடியாது. முதுகெலும்புள்ள தலைமைத்துவம் மிகவும் அவசியம். விவாதித்துக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. செயலில்தான் காட்ட வேண்டும்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam