கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம்! உயர் அதிகாரிக்கு மரண தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
2012ஆம் ஆண்டு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இன்றையதினம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, 8 கைதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைதியின்மையின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.
