யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டு இன முறுகலை ஏற்படுத்தி சதி - களமிறக்கப்படும் கும்பல்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து பவானி வீதி விடுவிப்புக்கு தடைபோட முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகின்றனர்.
திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும் விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri