முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவத்தினர் குவிப்பு! உள்நுழைய தடை
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்துள்ள நினைவு முற்றத்தின் நான்கு பகுதிகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டு அப்பகுதிக்குள் நுழைய இராணுவத்தால் தடை விதிக்கபட்டுள்ளது.
பிரதான வீதியிலிருந்து நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு உள்ளே எவரும் செல்ல முடியாது தடை ஏற்படுத்தபட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் கிராமத்துக்கு செல்வோர் வேறு பாதைகளால் செல்லுமாறு இராணுவத்தால் பணிக்கபடுகின்றார்கள்.
முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக இன்று கொண்டு வரப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்தப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.



