கொழும்பில் திடீரென எரிப்பொருள் நிலையத்தில் குவிந்த மக்களால் குழப்பம்! பொலிஸார் குவிப்பு (VIDEO)
நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதுடன்,எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல்,மண்ணெண்ணெய் என்பனவற்றினை பெற்றுக்கொள்ள மக்கள் நேர காலமின்றி வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிப்பொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக திடீரென குவிந்த மக்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மக்களுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதுடன், அமைதியின்மை நிலவியமையினால் உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.










