தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இழுபறி: தொடரும் சர்ச்சை
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவுக்காக கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் செயலாளர் தெரிவில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குகதாசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிநேசன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் தலைமைத்துவத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி ஒருவரும் இதில் போட்டியிட முற்பட்ட போது அதில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக மத்திய குழு குகதாசனின் பெயரை ஏக மனதாக தீர்மானித்தது.
வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடல்
குறித்த தீர்மானம் பொதுச்சபைக்கு வந்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் குகதாசனின் பெயரை ஏக மனதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டு வாக்கெடுப்பை கோரியிருந்தது.
எனினும் வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடலானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 21 மணி நேரம் முன்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி! பரஸ்பர வரி உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி News Lankasri

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri
