குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் : வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வைத்தியசாலையில்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு(17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதோடு, இளைஞர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துள்ளனர்.
இவ்வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள லொறி ஒன்றினையும் பெட்டிக் கடையொன்றினையும் இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய்
நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
