43 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல்போன சிறார்கள்! பொலிஸாரிடம் வழங்கியுள்ள வாக்குமூலம்
கொடதெனியா - வத்தேமுல்ல - பாதுராகொட பிரதேசத்தில் காணாமல்போன இரு சிறுவர்களும் ஒரு மாதத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தாக்கியமை காரணமாகவே தாங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக, காணாமல்போயிருந்த நிலையில் மீரிகம பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட 2 சிறார்களும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
கொடதெனியா - வத்தேமுல்ல - பாதுராகொட பகுதியில் காணாமல்போயிருந்த இரண்டு சிறார்கள் 43 நாட்களின் பின்னர் மீரிகம நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இன்று கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
தமது இளைய சகோதரரை கவனித்துக்கொள்ளாமையினால் தாய் உள்ளிட்டவர்கள் தங்களைத் தாக்கியதாகவும், தாங்கள் மீண்டும் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை எனவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறார்கள் இருவரும் உணவு கோரி நேற்று வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான பெண் உணவை வழங்கி, தங்குவதற்கும் அனுமதி வழங்கி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, குறித்த சிறார்களை மீரிகம பொலிஸார் பொறுப்பேற்று, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பல நாட்களாக நீர் கொழும்பில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தங்கியிருந்ததாக குறித்த சிறார்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில், அந்த இடத்தினை ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி 10 மற்றும் 12 வயதுகளுடைய இவ்விரு சிறுவர்களும் காணாமல் போனமை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
