ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் மாநாடு: தலைவர் பதவி ரணிலுக்கு
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.
55ஆவது மாநாடு
இம்முறை இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது மாநாடு நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிலிப்பைன்ஸில் உள்ள மெனிலா நகரத்தில் நடைபெறுகின்றது.
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளிட்ட நிதி அமைச்சு அதிகாரிகள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கு தலைமைத்துவம்
ஆசிய அபிவிருத்தி வங்கியானது 68 அங்கத்துவ நாடுகளை கொண்டுள்ளதுடன் ஆசியாவை சேர்ந்த அங்கத்தவர்கள் 49 பேரும் ஏனைய வெளி உறுப்பினர்கள் 19 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கோரிக்கைக்கு அமைவாக இம்முறை ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் மாநாட்டின் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படுவதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக இரண்டு வருடங்களுக்கு
தலைமை வகிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
