எல்லை நிர்ணயம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
தேர்தல் சீர்திருத்தம் என்ற நிலைப்பாடு கொண்டு வரப்படுகின்றபோது எல்லை நிர்ணயம் என்பது ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அநுராதப்புரத்தில் உள்ள சில இடங்களின் வரையறை வவுனியாவுடன் இணைக்கப்பட்டுள்ளமையை இதற்காக சுட்டிக்காட்ட முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் கருத்தாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த எல்லை நிர்ணயத்தில் கவனம் செலுத்தாதபோது எந்த ஒரு தேர்தல் சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதில் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எல்லை நிர்ணயத்தைக்கொண்டு பெரும்பான்மையின பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் செயற்பாடுகள் பொதுவில் மேற்கொள்ளப்படுகின்றன.இது தடுக்கப்பட வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் கருத்துரைத்த தமிழ்த் தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்,
பெண்களுக்கான தொகுதிகளை ஒதுக்கி அங்கு பெண்கள் மாத்திரமே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்களை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
வடக்கில் தொகுதி முறையால் பிரதிநிதிகள் தொிவு செய்யப்பட முடியும்.எனினும் மலையகத்தில் தொகுதி முறை சாத்தியமாகாது. எனவே மலையகத்தில் இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சீர்திருத்தங்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எப்போதும் ஆதரவை தரும் என்றும் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மைக்கட்சிகளைப் பொறுத்தவரையில் விகிதாசார முறையே சிறந்தது.
எனவே, அதனையே தாம் வலியுறுத்துவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam