இலங்கை மக்களை உள்நுழைப்பதில் சிங்கப்பூர் விதித்துள்ள நிபந்தனைகள்
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதருவோருக்கு நிபந்தனைகளுடன் உள்நுழைய சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
இரு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானச் சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பிஜி, மாலைத்தீவு மற்றும் துருக்கி ஆகிய 6 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாய்லாந்து பிரஜைகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam