இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கல்முனை வாழ் மக்களின் போராட்டம்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது இன்று(09.02.2024) கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில் இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கு ஊர்வலமாக சென்று நிறைவடைந்துள்ளது.
ஒன்று கூடிய பொது மக்கள்
பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான விடயங்களை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் ஒன்று கூடிய பொது மக்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam