போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றம் (VIDEO)
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச சபையின் 49 வது அமர்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 49 வது அமர்வு இன்று சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் பிரதேச சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக அமர்வு ஆரம்பானது.
இதன்போது தவிசாளரினால் 48 வது அறிக்கை முன்வைக்கப்பட்டனர்.அதனை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.விக்கினேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட பழைய பிரேரனை மீண்டும் புதிய பிரேரனையாக கொண்டுவரப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசசபைக்குரிய மீன் சந்தை கட்டிடத்தை உடைத்து மாகாணசபை நிதியின் ஊடாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை(வெள்ளிமலை) அவர்களினால் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்துக்கு (வெள்ளிமலை)கலாச்சார மண்டபமாக பெயர் மாற்றப்பட்டது.
அதனை பிரதேச சபைக்கு வழங்காமல் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் பழுகாமம் கலாச்சார மண்டபமாக புதிதாக பெயர் மாற்றப்பட்டு மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு வருமானம் வருவது குறைவாக இருக்கின்றது. எமது சபைக்கு சொந்தமான காணியில் கிழக்கு மாகாண சபையின் நிதி மூலம் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தினை பெற்றுத்தர இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சி.சந்திரகாந்தன் பல முறைகள் கூறியும் இதற்கான எந்த நடவடிக்கையும் கிடைக்கவில்லை என தவிசாளர் தெரிவித்தார்.
பழுகாமம் கலாசார மண்டபத்தில் திக்கோடை கிராமத்தில் இருந்து நிகழ்வு(பூப்பு நீராட்டு விழா) 06-03-2022ஆம் திகதி நடாத்துவதற்கு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஒரு மாதத்துக்கு முன்(20000) பணம் வாடகைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
எந்தவித திட்டமும் இல்லாமல் குறித்த மண்டபம் செயற்படுத்தப்படுகின்றது.அந்த நிகழ்வினை அங்கு அவர்களினால் நடாத்த முடியாமல் வேறுபகுதியில் மண்டபம் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முனைத்தீவு வட்டாரத்துக்கு உட்பட்ட பொறுகாமம் மயானத்துக்கு போரதீவு கனேடிய ஒன்றியம் 50 லட்சம் நிதி உதவி மூலம் மயானத்துக்கு நுழைவாயில் கோபுரம் எல்லை சுவர் அமைக்க அனுசரனை வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு போரதீவுப்பற்று பிரதேச சபையில் என்னால் பொறுகாமம் மயானத்திற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.பொறுகாமம் மயானம் ஆனது பெரியபோரதீவு முனைத்தீவு, பட்டாபுரம், கோவில்போரதீவு,புன்னக்குளம்,பொறுகாமம் ஆகிய (06)கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குரிய பொது மயானம் ஆகும்.
எனவே குறித்த பொது மயானத்தினை விளையாட்டு மைதானத்திற்கு வழங்கும் செயற்பாட்டுக்கு எதிராகவும்,பிரதேச செயலாளருக்கு எதிராகவும் முனைத்தீவு வட்டார உறுப்பினர் ம.சுகிகரன் அவர்களினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த பொறுகாமம் மயானம் ஆனது பிரதேச சபைக்குரியது. இந்த மாயானத்தில் முனைத்தீவு,பெரியபோரதீவு, பட்டாபுரம்,கோவில்போரதீவு,பொறுகாமம்,புன்னக்குளம் ஆகிய கிராமங்களுக்கு சொந்தமானது.
இறந்தவர்களை புதைத்த இடத்தில் விளையாட கொடுக்க வேண்டியது ஏற்றுக்கொள்ள முடியாது.இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் தேவை.ஆனாலும் அதற்கான காணியை அரச காணியில் அடையாளப்படுத்தி வழங்க வேண்டும் என இதன்போது முனைத்தீவு வட்டார உறுப்பினர் ம.சுகிகரன் தெரிவித்தார்.
இதனடிப்படையில் 49 சபை அமர்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கு எதிராக தவிசாளர்,உறுப்பினர்கள் இணைந்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



















ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
