மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு கண்டனம்
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதற்காக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வன்மையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று 09.10.2023 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று (08.10.2023) மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாய்மார்கள் சென்றுள்ளார்கள்.
தமிழர்களின் உரிமை
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருக்கு மிருகத்தனமாக பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாதிக்கப்பட்ட தரப்புக்களை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் அதிகாரிகளும் பொலிசாரும் புலனாய்வாளர்களும் அடித்து நொருக்குவதில் நியாயம் இல்லை. எங்களுக்கான நீதிக்காகத்தான் நாங்கள் தொடர்ச்சியாக போராடுகின்றோம்.
தமிழர்களின் உரிமைகள் எதுவும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தரை போராட்டம் என்பது பொதுவான போராட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில்தான் ஈடுபட்டுள்ளார்கள்.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
இதற்கான தீர்வினை கொடுக்காமல் மிலேச்சத்தனமாக பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
தலைவி யோகராசா கனக ரஞ்சனி கருத்து
மட்டக்களப்பு மாவட்ட தலைவி தாக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் பிள்ளைகளை தொலைத்து விட்டு நீதி கேட்டுப் போராடிவரும் தாயின் வலி தெரியாத இலங்கை பொலிஸார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி மீது தமது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டமையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி யோகராசா கனக ரஞ்சனி தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை தேடி அம்மார் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் மேச்சல் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக எமது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பங்கெடுத்தனர்.
இந்தப் போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்தபோது நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரிடம் தமிழர் நிலப் பகுதிகளால் மறைக்கப்படுவதற்கு நீதி கேட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டும் ஜனநாயக வழியில் போராடிய மக்களை காடை சட்டங்களை பயன்படுத்தும் சிறிலங்கா பொலிஸார் முர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் உங்களுக்கும் பிள்ளை இருந்திருந்தால் ஒரு தாயின் வலி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள்.
இந்த அம்மாவின் உயிருக்கு ஆபத்து வரும் ஆனால் அத்தனை பொறுப்புகளையும் இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் ஜனநாயக நீதியில் போராடுபவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கியமை தொடர்பில் சர்வதேச சமூகம் மௌனம் காக்ககூடாது.
இலங்கையில் தமிழ் மக்கள் மறைமுகமாக காணாமல் ஆக்கப்படுகிறார்கள்
கடத்தப்படுகிறார்கள் வெளிநாடு அனுப்பப்படுகிறார்கள் இவ்வாறான சம்பவங்கள்
தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதை அறிகிறோம்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை ஒரு மறைமுகமான நாடு
கடத்தலாகும் என தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
