சங்கு திருடர்கள் என்று கூறுபவர்கள் சங்குக்கு எதிராக செயற்பட்டவர்களே! சித்தார்த்தன் ஆதங்கம்
சங்கு திருடர்கள் என்று சொல்பவர்கள் எவருமே சங்கிற்காக பாடுபட்டவர்கள் அல்ல முக்கியமாக தமிழரசுக் கட்சியிலே சிலர் சங்கை தோற்கடிப்பதற்காகவே செயற்பட்டவர்கள் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருடப்பட்ட வீட்டிலே நின்று கொண்டு சங்கு திருடியவர்கள் என ஏன் கூறுகிறார்கள் என்று விளங்கவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில் கூட தேர்தல் பிரசாரங்களை கணிசமான அளவு மேற்கொள்ளாது இருந்தும் யாழ் மாவட்டத்திலே எமக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றது.
சங்கு என்பதைக் காட்டிலும் மிக முக்கியமான விடயம் நாங்கள் 5 கட்சிகள் ஒரு கூட்டாக போட்டியிடுகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை குறித்து மக்கள் பல தடவைகள் கூறி வந்திருக்கின்றார்கள். அந்தவகையில் நாம் மாத்திரமே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டமைபபாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri