யாழில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான கடற்படையினர்
யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மீண்டும் இன்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
காணியினை அளப்பதற்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
தொடர்ந்தும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கடற்படை முகாமிற்கு முன்பு அமர்ந்து இருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த இளவாலை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் இரண்டாம் திகதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடற்படையினர் தமது வீட்டுக்கு வருகைதந்து காணியினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் வைக்குமாறு கேட்டதாக காணி உரிமையாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - மாதகல், குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாதகல், குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150 பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் காலை நடைபெறவுள்ளது.
அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக தெரியவருகிறது.
எனினும் அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றதாக தெரியவருகிறது.
தொடர்புடைய செய்தி...
யாழில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு









உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
