இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை
இலங்கையைச் சேர்ந்த மூன்று மாதக் குழந்தைக்கு தமிழகம் கோவையில் அண்மையில் சிக்கலான இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை
சுவாசிப்பதில் சிரமம், குறைந்த எடை, அதிக வியர்வை மற்றும் பிறவியிலேயே இதய குறைபாடுகள் காரணமாக குழந்தை நீல நிறமாக மாறியிருந்தது.
சிசுவின் இதயத்தின் 3டி பிரதியைப் பயன்படுத்தி நிலைமையை ஆய்வு செய்த பின்னர், மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை கடந்த அக்டோபர் 31ஆம் திகதி மேற்கொண்டுள்ளனர்.

வீடு செல்ல அனுமதி
அறுவை சிகிச்சைக் குழுவிற்கு, குழந்தை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆர். விஜயகுமார் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் நவம்பர் 14ஆம் திகதி குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam