கட்டண குறைப்பில் இடம்பெறும் மோசடி: முறைப்பாடுகளுக்கான இலக்கம் அறிமுகம்
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக செயற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்காத ஓட்டுனர்களுக்கு எதிராக 076 045 0860 என்ற இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாடு
மேல் மாகாண வீதி பொது போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் அறவிடப்படும். இரண்டாவது கிலோ மீட்டருக்கு 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் புதிய கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
