பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு
மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்ற செயல்கள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''சமூகத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களை செய்யும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளபடுகின்றன.
அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதுடன் நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சம் தேவையில்லை
கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம்.'' என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
