கிளிநொச்சியில் களவாக அறுவடை செய்யப்பட்ட வயல்: பொலிஸாரின் கவனயீனம்
கிளிநொச்சியில் விவசாயி ஒருவரின் காணியை களவாக அறுவடை செய்தமை தொடர்பில் பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தார் வயல் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒருவரது வயல் காணியை களவாக இரவோடு இரவாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் கடந்த முதலாம் திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆகியோர் பொலிஸாருக்கு கடிதங்களை வழங்கி இருக்கின்ற போதும் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கைகளும் எடுக்காது இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
