நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான முறைப்பாடு! வெளியான புதிய தகவல்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில், தனிநபர் ஒருவரினால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனமொன்றிடம் இருந்து 200 மில்லியன் ரூபாவை லஞ்சமாகக் கோரியதாக, குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில்வாவுக்கு எதிரான வழக்கு
இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, சட்டத்தரணி சேனக பெரேராவின் ஆதரவுடன் முறைப்பாட்டாளரான எஸ்.எம்.நிசார் மௌவ்லானா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
இந்த சம்பவம் கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர் டி சில்வா தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அதிகாரிகளின் விசாரணைக்கும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் விசாரணை குழுவை அமைத்து அதன் அறிக்கை புதிய ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த புதிய முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியான தகவல் |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
