யாழில் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப்புக்கு முன்பாக நின்று பெண் ஒருவர் ஒளிப்படம் எடுத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
அதனைப் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த ஒளிப்படத்தை மையமாக வைத்து பொலிஸாருக்கு எதிராக விமர்சனத்தை அரசியல் செயற்பாட்டாளரான ஒருவர் தனது முகப்புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.
இதையடுத்துச் சட்டத்துக்கு முரணான வகையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தன்னை பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தினார் என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் சம்பந்தப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
