நல்லூர் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(19.2.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபை தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அறிந்த நிறுவன உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று பதிவு செய்துள்ளார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam