தயாசிறிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு: வெளியான காரணம்
ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்றைய தினம் (23.05.2023) கொடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் சுதந்திரக் கட்சி சார்பான வைபவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த வைபவத்தின் இறுதியில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அக்கட்சியின் ஊடகப்பிரிவின் அதிகாரியொருவரை தாக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பான விசாரணை
இதனையடுத்து, தன்னை தாக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட அதிகாரி கறுவாத்தோட்ட பொலிஸில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், குறித்த வைபவத்தில் கலந்து கொண்ட ஏனையவர்களின் உதவியுடன் தயாசிறியின் தாக்குதலில் இருந்து தான் தப்பித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |