யாழ்.மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் முறைப்பாடு: டக்ளஸ் நேரில் சென்று பணிப்புரை
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரையை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு நேற்று (03.04.2024) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட பிரச்சினை
குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப் பகுதியானது சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை பொது மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் நடவடைக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
