இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டு-செய்திகளின் தொகுப்பு
இந்தியா, இலங்கைக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கியுள்ள போதும் அதில் சில உதவிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறை மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார உதவிகள் முன்னிலை அடிப்படையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா அதிகபட்சமாக வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களையும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam