இந்தியா, இலங்கைக்கு செய்த உதவிகளை சீரான முறையில் பயன்படுத்தவில்லை : அரின்தம் பாக்சி கருத்து
இந்தியா, இலங்கைக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கியுள்ள போதும் அதில் சில உதவிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறை மேற்கொள்ளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார உதவிகள் முன்னிலை அடிப்படையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா அதிகபட்சமாக வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஏற்ப அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தெரிவு இடம்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam