நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இன்று (21) இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு சிறைச்சாலை தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
குடும்பங்களுக்கு இழப்பீடு
இதன்போது உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் அவர்களின் உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது, சிறைச்சாலை அவசர பதில் மற்றும் தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இதன்படி, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, எதிர்பாராத இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, அவர்களின் அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் செயல்முறைக்காக காத்திருக்காமல், இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிறைச்சாலை பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் மட்டுமல்லாமல், மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
யாழில் ஆலயத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவிப்பு
YOU MAY LIKE THIS VIDEO