இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டாரவுக்கு இழப்பீடு
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்களால் உயிரிழந்த இலங்கையரான சுஜித் பண்டாரவுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளை சுஜித் பண்டார குடும்பத்தினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இழப்பீடு
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுஜித் பண்டார யடவர 2018 ஆம் ஆண்டு உதவியாளர் பணிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
போரில் சுஜித் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 48 என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் உயிரிழந்த சுஜித் பண்டார யடவரவின் சடலம் நேற்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளது.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11.11.2023) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த சுஜித் பண்டாரவுக்கு சாத்தியமான அனைத்து இழப்பீடுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
